technology

img

வேலை ஆட்களைத் தேர்வு செய்யும் AI சாட்பாட்

ப்ளூ காலர் பணி சார்ந்த வேலைகளுக்கு ஆட்களை நியமிக்கும் AI Chatbot!

இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் சில நிறுவனங்கள், வேலைக்கு ஆள் தேடுவதற்கு ஏஐ சாட்பாட்களின் உதவியை நாடுகின்றன.

கடந்த ஆண்டு ஜெனரேட்டிவ் AI சாட்பாட் ஆன ChatGPT அறிமுகமானது. பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வல்லமை கொண்டது. கதை, கட்டுரை, கவிதை, கோடிங் என அனைத்தையும் இதில் பெறலாம். தொடர்ச்சியாகப் பல சாட்பாட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் உணவகம் சார்ந்த துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய சாட்பாட்கள் மேலை நாடுகளில் உதவி வருகிறது. மெக்டொனால்ட்ஸ், வெண்டிஸ், சிவிஎஸ் ஹெல்த் மற்றும் லோவ்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒலிவியா எனும் சாட்பாட், லோரியல் நிறுவனம் மியா எனும் சாட்பாட்டை பயன்படுத்துகின்றன. இந்த இரண்டு சாட்பாட்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை.

வேலைக்கான விண்ணப்பங்களைத் தேர்வுசெய்து, தகுதியான விண்ணப்பதாரர்களிடம், ‘வாரத்தின் கடைசி நாட்களில் பணி செய்வீர்களா?’ என்பது போல சில அடிப்படை கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலைப்பெற்று, அந்த பதிலின் அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கும். 

அச்சமயங்களில் தகுதியான விண்ணப்பங்களை அல்கரிதம் மாறி வரும் பதில்களின் அடிப்படையில் நிராகரிக்கிறது என AI சாட்பாட் உடன் நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.